search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்னால்தான் கோலியை திருத்த முடியும்: மெக்கானிக்கல் என்ஜினீயர் இப்படி சொல்ல காரணம்?
    X

    என்னால்தான் கோலியை திருத்த முடியும்: மெக்கானிக்கல் என்ஜினீயர் இப்படி சொல்ல காரணம்?

    கோலியின் திமிர்பிடித்த மனப்பான்மையை அடக்குவதற்கு சரியான நபர் நான்தான் என்று, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த மெக்கானிக்கல் என்ஜீனியர் கூறியுள்ளார்.
    கோலியின் திமிர்பிடித்த மனப்பான்மையை அடக்குவதற்கு சரியான நபர் நான்தான் என்று, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த மெக்கானிக்கல் என்ஜீனியர் கூறியுள்ளார்.

    இந்திய சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இதற்கு விராட் கோலிதான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் விராட் கோலியை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

    இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்களிப்பை அளித்த அனில் கும்ப்ளேவிற்கே இந்த அவமானம் என்றால், மற்றவர்களுக்கு என்னாகும் என்று எல்லோரும் நினைத்து வருகிறார்கள். இந்நிலையில் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பக் காலத்தை ஜூலை முதல் வாரம் வரை நீடித்துள்ளனர்.



    இதைபயன்படுத்திய மெக்கானிக்கல் என்ஜினீயர் ஒருவர், விராட் கோலியின் திமிர்பிடித்த மனப்பான்மையை அடக்குவதற்கு நான்தான் சரியான நபர், அதனால் மெக்கானிக்கல் என்ஜினீயரான நான் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து மெக்கானிக்கல் என்ஜினீயரான உபேந்திர நாத் பிரம்மச்சாரி கூறுகையில் ‘‘ஜாம்பவான் அனில் கும்ப்ளே ராஜினாமா செய்தபின், கோலிக்கு சிறப்பு வாய்ந்த நபர் பயிற்சியாளராக தேவையில்லை என்று நான் உணர்ந்ததால், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடிவு செய்தேன். கங்குலி, லஷ்மண் மற்றும் தெண்டுல்கர் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக்குழு எந்தவொரு முன்னாள் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்தாலும், அவர்கள் விராட் கோலியால் அவமதிக்கப்படுவார்கள்.

    விராட் கோலியை என்னால் சரியான பாதைக்கு கொண்டு வர முடியும். ஏனென்றால், விராட் கோலியின் திமிர்பிடித்த அணுகுமுறையை என்னால் சமாளித்துக் கொள்ள முடியும். ஒரு கிரிக்கெட் ஜாம்பவானால் அது முடியாது. நான் மெதுவாக அவரை சரியான பாதைக்கு வளப்படுத்தி கொண்டு வர முடியும். அதன்பின் பிசிசிஐ ஜாம்பவானை தலைமை பயிற்சியாளராக நியமிக்க முடியும்’’ என்றார்.
    Next Story
    ×