search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். டைட்டில் ஸ்பான்சருக்கு இத்தனை கோடியா?: மலைக்க வைத்த விவோ
    X

    ஐ.பி.எல். டைட்டில் ஸ்பான்சருக்கு இத்தனை கோடியா?: மலைக்க வைத்த விவோ

    கிரிக்கெட்டின் மிகப்பெரிய பணக்கார தொடரான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சரை 2199 கோடி ரூபாய் கொடுத்து 5 வருடம் தக்க வைத்துள்ளது.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008-ம் ஆண்டு ஐ.பி.எல். (இந்தியன் பிரிமீயர் லீக்) டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது. இந்த தொடர் ஆரம்பித்தபோது பெரிய அளவில் புகழ்பெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

    ஆனால், அசுர வளர்ச்சி பெற்று உலகின் முன்னணி டி20 கிரிக்கெட் லீக் தொடராக விளங்கி வருகிறது. இதில் பங்கேற்கும் வீரர்களுக்கு அணி உரிமையாளர்கள் கோடிக்கணக்கில் பணத்தை வாரி வழங்குகின்றனர். இதனால் சர்வதேச போட்டியில் விளையாடுவதை விட ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்த தொடருக்கான டைட்டில் ஸ்பான்சரை பெறுவதில் பெரும் போட்டி நிலவி வந்தது. ஐ.பி.எல். தொடர் தொடங்கியபோது 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை கட்டுமான நிறுவனமான டி.எல்.எஃப். குரூப் டைட்டில் ஸ்பான்சராக இருந்தது. அதன்பின் ஐந்து வருடத்திற்கு 396 கோடி ரூபாய் என பெப்சி நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரை பெற்றது.

    பின்னர் பெப்சியிடம் இருந்து 2014-15-ல் விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரை பெற்றது. விவோவின் டைட்டில் ஸ்பான்சார் காலம் இந்த வருடத்தோடு முடிவடைந்தது.



    இதனால் பிசிசிஐ 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை அடுத்த ஐந்து ஆண்டுக்கான டைட்டில் ஸ்பான்சருக்கு டெண்டர் கோரியது. இதில் விவோ, ஓப்போ ஆகிய செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் டைட்டில் ஸ்பான்சரை பெற ஆர்வம் காட்டினர்.

    டெண்டர் திறக்கப்பட்டதில் ஓப்போவை விட விவோ அதிக தொகைக்கு கோரியிருந்தது. இதனால் விவோவிற்கு அடுத்த ஐந்து ஆண்டுக்கான டைட்டில் ஸ்பான்சர் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக விவோ 2199 கோடி ரூபாய் கொடுக்க இருக்கிறது. இது கடந்த முறையை விட 554 சதவீதம் அதிகமாகும்.

    ஓப்போ 1430 கோடி ரூபாய்க்கு விருப்பம் தெரிவித்திருந்தது.
    Next Story
    ×