search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    20 ஓவர் கிரிக்கெட் பந்துவீச்சாளர் தரவரிசை: முதலிடத்தை இழந்தார் தாஹிர்
    X

    20 ஓவர் கிரிக்கெட் பந்துவீச்சாளர் தரவரிசை: முதலிடத்தை இழந்தார் தாஹிர்

    20 ஓவர் கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தரவரிசையில் தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் முதலிடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு இறங்கியுள்ளார்.
    துபாய் :

    20 ஓவர் கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் முதலிடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்ததால் தாஹிருக்கு இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    அவருக்கு பதிலாக பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் முதலிட அரியணையில் ஏறியுள்ளார். இந்தியாவின் பும்ரா 2-வது இடம் வகிக்கிறார். பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்.
    Next Story
    ×