search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல்: இந்தியாவின் யஷ்ஸ்வினிசிங் தேஷ்வால் தங்கம் வென்றார்
    X

    ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல்: இந்தியாவின் யஷ்ஸ்வினிசிங் தேஷ்வால் தங்கம் வென்றார்

    ஜெர்மனியின் சூல் நகரில் நடைபெற்று வரும் ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை யஷ்ஸ்வினிசிங் தேஷ்வால் தங்கம் வென்றார்.
    ஜெர்மனியில் உள்ள சூலில் சர்வதேச துப்பாக்கி சுடும் விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில் ஜூனியர் பிரிவினருக்கான உலக சாம்பியன் போட்டி கடந்த சனிக்கிழமை தொடங்கியது.

    இதில் இரண்டாம் நாளான நேற்று பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை யஷ்ஸ்வினிசிங் தேஷ்வால் தங்கம் வென்றார். அவர் 235.9 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தார். கொரிய வீராங்கனை கிம்வூரி 2-வது இடத்தை (231.8 புள்ளி) பிடித்தார்.

    கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 9 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்த தேஷ்வால், தற்போது முதன் முறையாக தங்கம் வென்றுள்ளார்.



    இதன் மூலம் இந்திய அணி பதக்க பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறுவதற்கு தேஷ்வால் உதவியுள்ளார். சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

    இந்திய வீரர்கள் இதுவரை 2 தங்கம், தலா ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் பதக்கம் வென்றுள்ளனர். முதல் நாளில் ஜூனியர் ஆண்களுக்கான 25 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் அனிஷ் பன்வாலா இரண்டு தங்கங்களை வென்று அசத்தினார். 
    Next Story
    ×