search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில சீனியர் தடகளம்: 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் யோகேஷ் வெற்றி
    X

    மாநில சீனியர் தடகளம்: 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் யோகேஷ் வெற்றி

    சென்னை மாவட்ட தடகள சங்கம் சார்பில் 90-வது மாநில சீனியர் தடகள போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் யோகேஷ் வெற்றி பெற்றார்.

    சென்னை:

    சென்னை மாவட்ட தடகள சங்கம் சார்பில் 90-வது மாநில சீனியர் தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

    தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் டி.கே. ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ. தேவாரம், சீனியர் துணைத் தலைவர் சி.சைலேந்திரபாபு, பொருளாளர் சி.லதா, துணைத் தலைவர் ஷைனி வில்சன், அரைஸ் ஸ்டீல் நிர்வாகி ஆதவா அர்ஜுன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழ்நாடு போலீசை சேர்ந்த கீதா முதல் இடத்தை பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 17 நிமிடம் 56.8 வினாடியில் கடந்தார். எஸ்.டி.ஏ.டி. வீராங்கனை விக்னேஷ் 18 நிமிடம் 14.2 வினாடியில் கடந்து 2-வது இடத்தையும், ஜோதி (செயின்ட் ஜோசப்ஸ் அகாடமி) 18 நிமிடம் 37.1 வினாடியில் கடந்து 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    10 ஆயிரம் மீட்டர் நடை பந்தயத்தில் செயின்ட் ஜோசப்ஸ் அகாடமி வீராங்கனை சாத்தாயி வெற்றி பெற்றார். அவர்பந்தய தூரத்தை 58 நிமிடம் 40.2 வினாடியில் கடந்தார். பவித்ரா (யூனிவர்சல் ஸ்போர்ட்ஸ் பவுண்டேசன்) 2-வது இடத்தையும் லாவண்யா 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அரைஸ் ஸ்டீல் அகாடமி வீரர் யோகேஷ் வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 15.15 நிமிடத்தில் கடந்தார். யோகேஷ் ஏற்கனவே நேற்று நடந்த 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வென்று இருந்தார்.

    விக்டர் (அரைஸ் ஸ்டீல்) 15.20 நிமிடங்களில் கடந்த 2-வது இடத்தையும், அரிகிருஷ்ணன் (செயின்ட் ஜோசப்ஸ் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    Next Story
    ×