search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகளிர் கிரிக்கெட்: தொடர்ந்து 7 அரைசதங்கள் அடித்து மிதாலி ராஜ் உலக சாதனை
    X

    மகளிர் கிரிக்கெட்: தொடர்ந்து 7 அரைசதங்கள் அடித்து மிதாலி ராஜ் உலக சாதனை

    இந்திய பெண்கள் கிரக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தொடர்ச்சியாக 7 அரைசதங்கள் அடித்து உலக சாதனைப் படைத்துள்ளார்.
    பெண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் குவித்தது. 3-வது நபராக களம் இறங்கிய மிதாலி ராஜ் 73 பந்தில் 71 ரன்கள் குவித்தார்.

    பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 47.3 ஓவரில் 246 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 71 ரன்கள் எடுத்ததன் மூலம் கேப்டன் மிதாலி ராஜ் தொடர்ச்சியாக 7 அரைசதங்கள் அடித்து உலக சாதனைப் படைத்துள்ளார்.



    இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் லிண்ட்சே ரீலர், எலிஸ் பெர்ரி, இங்கிலாந்தின் சார்லட் எட்வர்ட்ஸ் ஆகியோர் தொடர்ந்து 6 அரைசதங்களை அடித்து சாதனைப் படைத்திருந்தனர். இந்தச் சாதனையை நேற்றயை 7-வது அரைசதம் முறியடித்து மிதாலி ராஜ் உலக சாதனைப் படைத்துள்ளார்.

    மிதாலி ராஜியின் தொடர் அரைசதங்கள்:- 70 நாட் அவுட் (இலங்கை), 64 (தென்ஆப்பிரிக்கா), 73 நாட்அவுட் (வங்காள தேசம்), 51 நாட்அவுட் (தென் ஆப்பிரிக்கா), 54 (தென் ஆப்பிரிக்கா) 62 நாட்அவுட் (தென் ஆப்பிரிக்கா), 71 (இங்கிலாந்து)
    Next Story
    ×