search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோலி - கும்ப்ளே இடையிலான பிரச்சினை எல்லா விளையாட்டு துறைகளிலும் உள்ளதுதான்: பாங்கர்
    X

    கோலி - கும்ப்ளே இடையிலான பிரச்சினை எல்லா விளையாட்டு துறைகளிலும் உள்ளதுதான்: பாங்கர்

    விராட் கோலி - கும்ப்ளே ஆகியோருக்கு இடையிலான பிரச்சினை எல்லா விளையாட்டு துறைகளிலும் உள்ளது போன்றுதான் என்று பேட்டிங் பயிற்சியாளர் பாங்கர் கூறியுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ஆகியோருக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக புதிய பயிற்சியாளரை பிசிசிஐ தேடிவருகிறது.

    அனில் கும்ப்ளே விவகாரத்தில் விராட் கோலி மீது முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையாக தாக்கி வருகிறார்கள். இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் சஞ்சய் பாங்கர், எல்லா விளையாட்டுத்துறைகளில் உள்ளது போன்றுதான் என்று தான் உணர்வதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து சஞ்சய் பாங்கர் கூறுகையில் ‘‘நாங்கள் தொழில்முறை நபர்கள். மாற்றங்கள் நிகழும்போது இதுபோன்ற சில விஷயங்கள் எந்தவொரு விளையாட்டுத்துறையிலும் நடப்பது வழக்கமானதுதான். இந்த பிரச்சினையில் உதவி பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் தங்களது கடமையை சிறப்பாக செய்துள்ளனர். இதுவரை சிறப்பாக சமாளித்து சென்றுள்ளனர்.



    அணி முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற விவகாரம் வெளிவரும்போது, மிகவும் சுலபமாக இருக்காது என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இதேபோல் விஷயம் சென்று கொண்டிருக்கும்போது, ஏற்கனவே இதேபோன்ற விஷயம் நடத்திற்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்தவொரு பிரச்சினையாலும் இந்திய அணியின் முன்னேற்றம் எந்தவிதத்திலும் பாதித்து விடக்கூடாது

    அனில் கும்ப்ளே தலைமையில் இந்திய அணி அபாரமான வெற்றிகளை பெற்றுள்ளது. அவர் இல்லாதது ஒரு வெற்றிடமே’’ என்றார்.
    Next Story
    ×