search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 போட்டியிலும் டி.ஆர்.எஸ். முறை - அக்டோபர் 1-ந்தேதி அமல்
    X

    டி20 போட்டியிலும் டி.ஆர்.எஸ். முறை - அக்டோபர் 1-ந்தேதி அமல்

    டி20 கிரிக்கெட் போட்டியில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை அக்டோபர் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
    லண்டன்:

    கிரிக்கெட் போட்டியில் ஆடுகள நடுவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறையான டி.ஆர்.எஸ். 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    பாகிஸ்தான்- நியூசிலாந்து இடையே 2009 நவம்பர் 24-ந்தேதி நடந்த டெஸ்டில் டி.ஆர்.எஸ். முறையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கொண்டு வந்தது.

    2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் டி.ஆர்.எஸ். பயன்படுத்தப்பட்டது. இங்கிலாந்து அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது இது அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதேபோல 20 ஓவர் போட்டியிலும் டி.ஆர்.எஸ். முறையை கொண்டு வருவது என்று ஐ.சி.சி. கடந்த பிப்ரவரி மாதம் முடிவு செய்தது. 20 ஓவர் உலக கோப்பையில் இருந்து கொண்டுவர தீர்மானித்து இருந்தது.

    டி.ஆர்.எஸ். குறித்து ஐ.சி.சி. கமிட்டி பல்வேறு பரிந்துரைகளை தாக்கல் செய்து இருந்தது. இதற்கு ஐ.சி.சி.யின் தலைமை நிர்வாக குழு ஒப்புதல் அளித்தது. இதன்படி 20 ஓவர் போட்டியில் டி.ஆர்.எஸ்.முறை அக்டோபர் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

    அனைத்து வகையான 20 ஓவர் ஆட்டத்திலும் டி.ஆர்.எஸ். கொண்டு வரப்பட்டது. எல்லா வகையான முடிவுகளும் இதில் வராது. இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டெஸ்ட் போட்டியில் 80 சதவீத மறுஆய்வுகள் நீக்கப்பட்டன.
    Next Story
    ×