search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி, அவரை ‘பாஸ்’ என்று நினைத்தால் பயிற்சியாளர் தேவையில்லை: எரபல்லி பிரசன்னா
    X

    விராட் கோலி, அவரை ‘பாஸ்’ என்று நினைத்தால் பயிற்சியாளர் தேவையில்லை: எரபல்லி பிரசன்னா

    இந்திய அணியின் கேப்டன் தன்னை ஒரு ‘பாஸ்’ என்று நினைத்தால் இந்திய அணிக்கு பயிற்சியாளர் தேவையில்லை என்று எரபல்லி பிரசன்னா கூறியுள்ளார்.
    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் அனில் கும்ப்ளே. இவரது ஓராண்டு காலத்தில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றிகளை குவித்துள்ளது. டெஸ்ட் தொடரை இழந்ததில்லை. இந்திய மண்ணில் விளையாடிய 17 டெஸ்டில் ஒன்றில் மட்டுமே இந்தியா தோல்வியடைந்துள்ளது.

    இதனால் மேலும் ஓராண்டு கும்ப்ளே பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நேரத்தில்தான் கும்ப்ளேவிற்கும் விராட் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

    பின்னர், அனில் கும்ப்ளே தனது தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு விராட் கோலிதான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

    இதனால் முன்னாள் வீரர்கள் அனைவரும் விராட் கோலிக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எரபல்லி பிரசன்னாவும் விராட் கோலிக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். விராட் கோலி தன்னை ‘பாஸ்’ என்று நினைத்தால், இந்திய அணிக்கு பயிற்சியாளர் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து எரபல்லி பிரசன்னா கூறுகையில் ‘‘கேப்டன் அணியின் ‘பாஸ்’-ஆக இருந்தால், பிறகு ஏன் அவர்கள் பயிற்சியாளரை தேடுகிறார்கள். மேலும், பேட்டிங் அல்லது பீல்டிங் பயிற்சியாளர்கள் தேவை என்று ஏன் நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.



    விராட் கோலி தலைசிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் சிறந்த கேப்டனா, இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை.

    அனில் கும்ப்ளேவிற்கே மரியாதை கிடைக்கவில்லை என்றால், சஞ்சய் பாங்கர், ஸ்ரீதரும் உறுதியான வழிகாட்டுதலை விராட் கோலிக்கும் சொல்வார்கள் என்று நான் நினைக்கவில்ல. அவர்களுக்கு கும்ப்ளே போன்ற அனுபவம் கிடையாது. இந்திய அணிக்கு உடற்பயிற்சி பயிற்சியாளர் மட்டுமே போதுமானது. இதுபோன்ற கேப்டனின் அணுகுமுறை இருந்தால், பயிற்சியாளர்கள் தேவை என்று நினைக்கவில்லை’’ என்றார்.
    Next Story
    ×