search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷித் கானை சச்சினுடன் ஒப்பிட்ட இந்திய முன்னாள் பேட்ஸ்மேன்
    X

    ரஷித் கானை சச்சினுடன் ஒப்பிட்ட இந்திய முன்னாள் பேட்ஸ்மேன்

    ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருடன் ஒப்பிட்டுள்ளார் இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் லால்சந்த் ராஜ்புட்.
    லண்டனில் நேற்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதனால் இரண்டு அணிகளும் டெஸ்ட் போட்டியில் இனிமேல் விளையாடும்.

    சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் கலந்து கொண்டார். இவர் அபாரமாக பந்து வீசி 14 போட்டிகளில் 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். அவரது பந்தை கணிக்க முன்னணி பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.



    தற்போது அவரை இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளவருமான லால்சந்த் ராஜ்புட் மிகவும் புகழந்துள்ளார். சச்சின் தெண்டுல்கருடன் அவரை ஒப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து லால்சந்த் ராஜ்புட் கூறுகையில் ‘‘கிரிக்கெட்டில் ரஷித் கான் ஒரு புதிய குழந்தை. இவருக்கு பிறவிலேயே கிரிக்கெட் திறமை உள்ளது. சச்சின் போன்ற சில வீரர்கள்தான் இதுபோன்ற சிறப்பான திறமையுடன் பிறந்துள்ளனர். அதே வரிசையில் பந்து வீச்சில் ரஷித் கான் திறமையை பெற்றுள்ளார்.



    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் ஒரு தூண் ரஷித் கான். சற்று வேகமாக வீசும் இவரது பந்து வீச்சை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள சிரமப்படுகிறார்கள்’’ என்றார்.
    Next Story
    ×