search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயம் காரணமாக தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் பிராட் பங்கேற்பது சந்தேகம்
    X

    காயம் காரணமாக தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் பிராட் பங்கேற்பது சந்தேகம்

    காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.
    இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். இவர் நட்டிங்காம்ஷைர் அணிக்காக விளையாடி வருகிறார். நாட்டிங்காம்ஷைர் லெய்செஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் நாட்டிங்காம்ஷைர் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

    இந்த போடடியின்போது கால் பாதத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்டூவர்ட் பிராட் ஒரு ஓவர் மட்டுமே பந்து வீசிவிட்டு வெளியேறினார். அவரது காயம் குறித்து கண்டறிய ஸ்கேன் செய்யப்பட உள்ளது.

    இதற்கிடையே இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 6-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பிராட் பங்கேற்பதாக இருந்தது. தற்போது பிராட் காயம் அடைந்துள்ளதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கவலை அடைந்துள்ளது.

    ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபில் தொடரின்போது ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் காயம் காரணமாக வெளியேறினார். அவர் இன்னும் குணமடையவில்லை. பென் ஸ்டோக்ஸ் முழுத்தகுதியுடன் இல்லை. ஆண்டர்சன் நீண்ட நாட்களாக விளையாடாமல் உள்ளார். இந்த நிலையில் பிராட் காயம் அடைந்திருப்பது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×