search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் ஒருநாள் போட்டி கண்ணோட்டம்
    X

    இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் ஒருநாள் போட்டி கண்ணோட்டம்

    இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் ஒருநாள் போட்டியில் மோதியது குறித்து சில தகவல்களை காணலாம்.
    ஒரு நாள் போட்டியில் இரு அணிகளும் இதுவரை 116 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் இந்தியா 53 போட்டியிலும், வெஸ்ட் இண்டீஸ் 60 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி முடிவு இல்லை. ஒரு ஆட்டம் ‘டை’யில் முடிந்தது.

    இந்திய அணி 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தூர் மைதானத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். வெஸ்ட் இண்டீஸ் அணி அதிகபட்சமாக 1983-ம் ஆண்டில் 338 ரன் (ஜாம் ஷெட்பூர்) குவித்து இருந்தது.

    இந்திய அணி 1993-ம் ஆண்டு ஆமதாபாத்தில் 100 ரன்னில் சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோராகும். வெஸ்ட் இண்டீஸ் 121 ரன்னில் ‘அல் அவுட்’ ஆனது (1997 போர்ட் ஆப் ஸ்பெயின்) குறைந்தபட்ச ஸ்கோராகும்.



    தெண்டுல்கர் 39 ஆட்டத்தில் 1573 ரன் எடுத்துள்ளார். சராசரி 52.43 ஆகும். இதில் 4 சதமும் 11 அரை சதமும் அடங்கும். அதிகபட்சம் 141 ரன் குவித்துள்ளார். டெஸ்ட்மான்ட் கெய்னஸ் 1357 ரன்னும், ராகுல் டிராவிட் 1348 ரன்னும் எடுத்துள்ளார்.

    ஷேவாக் ஒரு ஆட்டத்தில் 219 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார். 2011-ம் ஆண்டு இந்தூர் மைதானத்தில் இந்த ரன்னை எடுத்தார். கெய்னஸ் 152 ரன்னும், சந்திரபால், விவியன் ரிச்சர்ட்ஸ் தலா 149 ரன்னும் எடுத்துள்ளனர்.

    கார்ட்னி வால்ஷ் அதிகபட்சமாக 44 விக்கெட் கைப்பற்றி உள்ளார். கபில்தேவ் 43 விக்கெட்டும் எடுத்துள்ளார்.

    கும்ப்ளே 12 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியதே சிறந்த பந்துவீச்சு ஆகும். 1993-ம் ஆண்டு கொல்கத்தா மைதானத்தில் இந்த முத்திரையை பதித்து இருந்தார்.
    Next Story
    ×