search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலிக்கு ஆலோசனைக் கூறிய அபிநவ் பிந்த்ரா
    X

    விராட் கோலிக்கு ஆலோசனைக் கூறிய அபிநவ் பிந்த்ரா

    அனில் கும்ப்ளே விவகாரத்தில் இந்தியாவின் முன்னணி துப்பாக்கி சுடும் வீரரான அபிநவ் பிந்த்ரா கேப்டன் விராட் கோலிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
    இந்திய சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே, நேற்று அந்த பதவியில் இருந்து விலகினார். விராட் கோலிக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கும்ப்ளே விலகியுள்ளார்.

    இந்நிலையில் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அபிநவ் பிந்த்ரா கோலிக்கு சில ஆலோசனைக் கூறியுள்ளார்.



    இதுகுறித்து  அபிநவ் பிந்த்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘என்னுடைய மிகப்பெரிய ஆசான் என்னுடைய பயிற்சியாளர் யுவ். நான் அவரை வெறுத்தேன்.

    ஆனால், அவருடன் 20 வருடங்கள் ஒட்டுக்கொண்டே இருந்தேன். அவர் எப்போதும் சில விஷங்களை என்னிடம் சொல்வார். நான் அதை கேட்க விரும்பியதில்லை. #justsaying’’ என்று பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×