search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் என்னை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு: டி வில்லியர்ஸ்
    X

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் என்னை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு: டி வில்லியர்ஸ்

    இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்த கிடைத்த வாய்ப்பு என டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி ஒரு வெற்றியோடு அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. இந்த தொடருக்கு முன் இங்கிலாந்து மண்ணில் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய பின்பும், டி வில்லியர்ஸ் சிறப்பான வகையில் ஆடவில்லை.

    இது அவருக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்துவதற்காக கொடுக்கப்பட்ட வாய்ப்பு என்று டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.



    இதுகுறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய பின்னர், இரண்டு நாட்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது.

    ஏராளமான விமர்சனங்கள் எழுந்தது. இதையெல்லாம் தென்அப்பிரிக்கா வீரர்கள் நேர்மறையாக எடுத்துக் கொண்டு, தற்போதைய தொடரை முன்னேற்றத்திற்கான வாய்ப்பு என்று கருதுகிறார்கள். இந்த மூன்று போட்டிகளும் எனக்கும், இந்திய அணிக்கும் வாய்ப்பை கொடுக்கும்’’ என்றார்.
    Next Story
    ×