search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை வீராங்கனை குமாரிஹமி ஆட்டம் இழந்த மகிழ்ச்சியை இங்கிலாந்து அணியினர் பகிர்ந்து கொள்கின்றனர்.
    X
    இலங்கை வீராங்கனை குமாரிஹமி ஆட்டம் இழந்த மகிழ்ச்சியை இங்கிலாந்து அணியினர் பகிர்ந்து கொள்கின்றனர்.

    பெண்கள் உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி

    இந்திய அணி - நியூசிலாந்து அணிகள் மோதிய பயிற்சி ஆட்டம் ஒன்றில் நியூசிலாந்து அணி 26.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ஷெஸ்டர்பீல்டு :

    11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 24-ந் தேதி முதல் ஜூலை 23-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. இந்த போட்டிக்கான பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது.

    இதில் ஷெஸ்டர்பீல்டில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, இங்கிலாந்து வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 47.2 ஓவர்களில் 155 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 30.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. முதலில் ஆடிய இந்திய அணி 45.1 ஓவர்களில் 130 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 26.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    Next Story
    ×