search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசப்பற்று ஏன் கிரிக்கெட்டை சுற்றியே உள்ளது என்பது புரியவில்லை: வங்காள தேச கேப்டன்
    X

    தேசப்பற்று ஏன் கிரிக்கெட்டை சுற்றியே உள்ளது என்பது புரியவில்லை: வங்காள தேச கேப்டன்

    தேசப்பற்று ஏன் கிரிக்கெட்டை சுற்றியே உள்ளது என்பது புரியவில்லை என்று வங்காள தேச கேப்டன் மோர்தசா கூறியுள்ளார்.
    வங்காள தேச கிரிக்கெட் அணியின் கேப்டன் மோர்தசா. இவர் தலைமையிலான வங்காள தேச அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முதன்முறையாக முன்னேறியது. ஆனால், இந்தியாவிடம் தோல்வியடைந்து இறுதி வாய்ப்பை இழந்தது.

    சமீப காலமாக இந்தியா - பாகிஸ்தான், பாகிஸ்தான் - வங்காள தேசம், இந்தியா - வங்காள தேசம் கிரிக்கெட் போட்டியின்போது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். தங்கள் அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்குமேல் கிரிக்கெட்டை தேசப்பற்றாக நினைக்கிறார்கள்.

    இந்நிலையில் தேசப்பற்று ஏன் கிரிக்கெட்டை சுற்றியே உள்ளது என்பது எனக்கு புரியவில்லை என்று வங்காள தேச அணி கேப்டன் மோர்தசா கூறியுள்ளார்.

    இதுகுறித்து மோர்தசா கூறுகையில் ‘‘நான் ஒரு கிரிக்கெட் வீரர். ஆனால், என்னால் உயிரை காப்பாற்ற முடியுமா?. டாக்டரால்தான் உயிரை காப்பாற்ற முடியும். ஆனால், நாட்டின் சிறந்த டாக்டரை யாரும் பாராட்டுவதில்லை. டாக்டர்களை சுற்றி நம்பிக்கையை உருவாக்க வேண்டும். நிறைய உயிர்களை காப்பாற்றுவார்கள். அவர்கள்தான் சூப்பர் ஸ்டார்கள்.

    தொழிலாளர்கள்தான் சூப்பர் ஸ்டார்கள். அவர்கள்தான் நாட்டை உருவாக்குகிறார்கள். கிரிக்கெட்டை பயன்படுத்தி எதை கட்டுகிறீர்கள்?. கிரிக்கெட்டை பயன்படுத்தி ஒரு செங்கல் உருவாக்க முடியுமா? கிரிக்கெட் மைதானத்தால் நெற்கதிர்களை வளர்க்க முடியுமா?.

    செங்கலை யார் உருவாக்குகிறார்களோ, தொழிற்சாலைகளை உருவாக்குகிறார்களோ, வயல்வெளியில் கதிர்களை வளர்க்கிறார்களோ, அவர்ளே உண்மையான ஸ்டார்கள்.

    ஒரு நடிகர் அல்லது பாடகர் சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்வதுபோல் நாங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு விளையாடுகிறோம். இதைவிட மேலும் ஒன்றுமில்லை.

    சில தேசப்பற்று, தேசப்பற்று என்று கிரிக்கெட் சுற்றியே சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அனைவரும் ஒருநாள் வாழைப்பழத் தோளை ரோட்டில் விசாமலும் அல்லது தெருக்களில் துப்பாமலும், போக்குவரத்து விதியை மீறாமலும் இருந்தால், நாடு கட்டாயம் மாற்றமடையும்.

    கிரிக்கெட்டால் உங்களுடைய சக்தியை வீணாகிவிடக் கூடாது. நேர்மையான வேலைக்காக பயன்படுத்த வேண்டும். மக்களின் தேசப்பற்றி வரையறையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
    Next Story
    ×