search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாக்கி உலக லீக் அரையிறுதி தொடர்: பாகிஸ்தானை 7-1 என வீழ்த்தியது இந்தியா
    X

    ஹாக்கி உலக லீக் அரையிறுதி தொடர்: பாகிஸ்தானை 7-1 என வீழ்த்தியது இந்தியா

    லண்டனில் நடைபெற்று வரும் ஹாக்கி உலக லீக் அரையிறுதி தொடரில் இந்தியா 7-1 என பாகிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.
    ஹாக்கி உலக லீக் அரையிறுதி தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. அயர்லாந்து, கனடாவை வீழ்த்திய இந்தியா, இன்று பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்தியது.



    இந்த போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியா 7-1 என பாகிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

    இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல்களும், தல்விந்தர் சிங் 2 கோல்களும், ஆகாஷ் தீப் இரண்டு கோல்களும், பிரதீப் மோர் ஒரு கோலும் அடித்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் மொகமது உமர் பூட்டா ஒரு கோலும் அடித்தனர்.
    Next Story
    ×