search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறந்த ஆடுகளம்- கோலி; நாங்கள் முதலில் பந்து வீச விரும்பினோம் - சர்பிராஸ் அகமது
    X

    சிறந்த ஆடுகளம்- கோலி; நாங்கள் முதலில் பந்து வீச விரும்பினோம் - சர்பிராஸ் அகமது

    இறுதிப் போட்டிக்கான ஆடுகளம் சிறந்ததாக இருக்கிறது. புது ஆடுகளம், புற்கள் காணப்படுகிறது. பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்து வீசுவார்கள் என்று கோலி கூறியுள்ளார்.
    இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி லண்டன் ஒவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் கான் காய்ன்-ஐ சுண்ட விராட் கோலி ஹெட் கேட்டார். விராட் கோலி கேட்டபடி ஹெட் விழ, இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது.

    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘ஆடுகளம் மிகக் கடினமாகவும், சிறப்பாகவும் உள்ளது. புது ஆடுகளம். இருந்தாலும் புற்கள் காணப்படுகிறது. எங்களுடைய பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தானை குறைந்த ஸ்கோரில் சுருட்டி, அதன்பிறகு சேஸிங் செய்ய விரும்புகிறோம்.

    சிறந்த கிரிக்கெட் விளையாடும்போது சூழ்நிலை பெரிய விஷயம் இல்லை. இன்னும் ஒரு முயற்சி எடுக்கப்பட வேண்டியிருக்கிறது. இந்திய அணி வீர்ரகள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இறுதிப் போட்டிக்கு வந்துவிட்டால், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். எதிரணிக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கக்கூடாது. இன்றைய போட்டியிலும் இந்த நோக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. பாகிஸ்தான் அணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து எங்களுக்கு கவலையில்லை. எங்கள் திறமை மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்’’ என்றார்.

    பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறுகையில் ‘‘நாங்கள் முதலில் பந்து வீச விரும்பினோம். ஆனால் டாஸ் எங்களது கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டது. 300 ரன்களுக்கு மேல் குவிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் இங்கிலாந்து வரும்போது, நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று கூறினேன். இன்று இழப்பிதற்கும் ஒன்றுமில்லை. மொகமது ஆமிர் உடற்தகுதி பெற்றுள்ளார். அதனால் இன்றைய போட்டியில் அவர் விளையாடுகிறார்’’ என்றார்.

    பாகிஸ்தான் அணி:-

    1. அசார் அலி, 2. பகர் சமான், 3. பாபர் ஆசம், 4. மொகமது ஹபீஸ், 5. சோயிப் மாலிக், 6. சர்பிராஸ் அகமது, 7. இமாத் வாசிம், 8. மொகமது ஆமிர், 9. ஷடாப் கான், 10. ஹசன் அலி, 11. ஜுனைத் கான்.

    இந்திய அணி:-

    1. ரோகித் சர்மா, 2. தவான், 3. விராட் கோலி, 4. யுவராஜ் சிங், 5. டோனி, 6. கேதர் ஜாதவ், 7. ஹர்திக் பாண்டியா, 8. ஜடேஜா, 9. அஸ்வின், 10. புவனேஸ்வர் குமார், 11. பும்ப்ரா.
    Next Story
    ×