search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடி கிரிக்கெட் கிடையாது: அமித் ஷா
    X

    இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடி கிரிக்கெட் கிடையாது: அமித் ஷா

    இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடி கிரிக்கெட் தொடர் கிடையாது என்று பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
    இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கோடு அருகே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணும் இந்திய எல்லைக்குள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், தீவிரவாகள் ஊடுருவலுக்கு துணை புரிகிறது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

    எனவே, எல்லை கடந்த தீவிரவாத தாக்குதல் நிறுத்தப்படும் வரை இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேரடி கிரிக்கெட் தொடர் நடைபெறாது என பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற வேண்டுமென்றால் மத்திய அரசின் முடிவை பெறுவது கட்டாயம்.

    பிசிசிஐ மத்திய அரசிடம் பலமுறை அனுமதி கேட்டது. ஆனால், மத்திய அரசு திட்டவட்டமாக அதை நிராகரித்து விட்டது. இந்நிலையில் பா.ஜனதாவின் தேசிய தலைவரான அமித் ஷாவிடம், இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடி கிரிக்கெட் தொடர் மீண்டும் தொடங்கி நடைபெறுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அமித் ஷா பதலளிக்கையில் ‘‘சர்வதேச தொடர்களில் இந்தியா பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும். ஆனால், இந்தியா பாகிஸ்தான் மண்ணிலோ, பாகிஸ்தான் இந்திய மண்ணிலோ விளையாடாது’’ என்றார்.

    இதன்மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான நேரடி கிரிக்கெட் தொடருக்கு வாய்ப்பில்லை என்பது தெள்ளத்தெளிவாகியுள்ளது.

    மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரும் இதே கருத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×