search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவை வீழ்த்தி பழிதீர்க்க இறுதிப் போட்டி கோல்டன் வாய்ப்பு: இம்ரான் கான்
    X

    இந்தியாவை வீழ்த்தி பழிதீர்க்க இறுதிப் போட்டி கோல்டன் வாய்ப்பு: இம்ரான் கான்

    தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிற்கு எதிராக அடைந்த மோசமான தோல்விக்கு பழிக்குப்பழி வாங்க இறுதிப் போட்டி சரியான வாய்ப்பு என இம்ரான் கூறியுள்ளார்.
    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துக்கின்றன.

    இந்த போட்டி குறித்து முன்னணி வீரர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் தொடக்க போட்டியில் தோல்வியடைந்ததற்கு பழிக்குப்பழி வாங்க இறுதிப்போட்டி பாகிஸ்தான் அணிக்கு கிடைத்த கோல்டன் வாய்ப்பு என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.

    இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் இம்ரான் மேலும் கூறுகையில் ‘‘நம்முடைய பெருமையை திரும்பப் பெற சிறந்த வாய்பை பெற்றுள்ளோம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், முதல் போட்டியில் நாம் இந்தியாவிடம் தோல்வியடைந்துள்ளோம். நாம் எப்படி தோல்வியடைந்து அவமானம் அடைந்தோமோ, அதில் இருந்து திரும்ப முடியும்.

    இந்திய அணி மிகச்சிறந்த பேட்டிங் வரிசையை பெற்றுள்ளது. அவர்கள் பெரிய ஸ்கோர் அடித்தால், பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். மற்ற அணிகளுக்கு எதிராக பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் மேற்கொண்ட பீல்டிங் அமைப்பு மிகச் சிறந்ததாக இருந்தது. அவரின் சில தீர்க்கமான முடிவு என்னை மிகவும் கவர்ந்தது’’ என்றார்.
    Next Story
    ×