search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான பயிற்சி ஆட்டம் மழையினால் தாமதம்
    X

    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான பயிற்சி ஆட்டம் மழையினால் தாமதம்

    சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மழையினால் தொடங்குவதில தாமதம் ஏற்பட்டுள்ளது.
    சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வருகிற 1-ந்தேதி முதல் ஜூன் 18-ந்தேதி வரை நடக்கிறது.

    தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான பயிற்சி ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழையின் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.



    மழை நின்றதும் டாஸ் போடப்பட்டதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணிக்கு ஆட்டம் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியா முதல் போட்டியில் இலங்கையையும், பாகிஸ்தான் வங்காள தேசத்தையும் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×