search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே டி20 கிரிக்கெட் போட்டி: காபுல், லாகூரில் நடக்கிறது
    X

    பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே டி20 கிரிக்கெட் போட்டி: காபுல், லாகூரில் நடக்கிறது

    நட்பு முறையில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே டி20 கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இந்த போட்டிகள் காபுலிலும், லாகூரிலும் நடக்கிறது.
    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான அடிஃப் மாஷல் நேற்று லாகூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷஹாரியார் கானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களுடைய பேச்சுவார்த்தை நீண்ட நேரம் நீடித்தது.

    அப்போது ஆப்கானிஸ்தானின் இளைஞர்கள் பயன்படும் வகையில் பயிற்சிக்கு மைதானம் அளித்தல், இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் அடிஃப் மாஷல் கூறுகையில் ‘‘இருநாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் மற்றும் இரு நாடுகள் இடையிலான உறவுகள் வரலாற்றுமிக்கது. இது புதிதல்ல.

    நான் இங்கே வந்தது நம்முடைய தொடர்பு புதுப்பித்துக்கொள்ளதான். இருநாடுகளுக்கு இடையிலான அரசியல் சூழ்நிலையால் விளையாட்டு பாதிக்கப்பட்டு விடக்கூடாது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு திட்டங்களுக்கு ஒப்பதல் அளிக்கப்பட்டுள்ளது.

    நட்பு ரீதியிலான போட்டியின் மூலம் இருநாட்டு உறவுகளை புதுப்பிக்க இருக்கிறோம். அதன்படி பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே காபுலில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படும். அதன்பின் நாங்கள் பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் விளையாடுவோம். மேலும் இருநாடுகளுக்கிடையே கிரிக்கெட் தொடர் நடத்த முடிவு செய்துள்ளோம். தேதி பின்னர் முடிவு செய்யப்படும்’’ என்றார்.
    Next Story
    ×