search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறந்த பேட்ஸ்மேன்தான், ஆனால்...; விராட் கோலியை சீண்டும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்
    X

    சிறந்த பேட்ஸ்மேன்தான், ஆனால்...; விராட் கோலியை சீண்டும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்

    விராட் கோலி குறித்து எங்களுக்கு பயம் இல்லை. அவரை எப்படி எதிர்கொள்வது என்று எங்களுக்குத் தெரியும் என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் கூறியுள்ளார்.
    சாம்பியன்ஸ் டிராவி கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளது. வியாழக்கிழமை (ஜூன் 1-ந்தேதி) இத்தொடர் தொடங்குகிறது. இந்த தொடர் குறித்த கிரிக்கெட் ஜூரம் ரசிகர்களிடையே பற்றிக்கொண்டுள்ளது. இத்தொடரை பற்றி பேசுவதை விட இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்துதான் அதிக பேச்சு நடைபெற்று வருகிறது.

    இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியில் இரு அணி வீரர்களும் திறமைகளை வெளிக்காட்டுவதுடன் மனநிலையை சீராக வைத்திருப்பதும் முக்கியமானதாகும்.

    இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி உணர்வுப்பூர்வமானதாக கருதப்படுகிறது. இதனால் வீரர்கள் பதற்றமடையக்கூடும். இதை எதிரணிகள் சாதகமாக மாற்றிக் கொள்வார்கள். போட்டி தொடங்குவதற்கு முன்பே சில வீரர்கள் முன்னணி வீரர்களை சீண்டத் தொடங்குவார்கள்.

    அதேபோல்தான் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜுனைத்கான், விராட் கோலி குறித்து எங்களுக்கு பயமில்லை. அவரை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து எங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.



    இதுகுறித்து ஜுனைத் கான் கூறுகையில் ‘‘இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய நான்கு போட்டிகளில் மூன்றுமுறை விராட் கோலியை நான் அவட்டாக்கியுள்ளேன். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் எனக்கெதிராக அவர் தோல்வியடைந்துள்ளார்.

    ஜூனைத் கானுக்கு எதிராக டோனி 22 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 21 பந்தில் ரன்ஏதும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×