search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடைகாலத்தில் போட்டிகளை இரவில் நடத்துங்கள்: ஸ்பெயின் கால்பந்து வீரர்கள் சங்கம் கோரிக்கை
    X

    கோடைகாலத்தில் போட்டிகளை இரவில் நடத்துங்கள்: ஸ்பெயின் கால்பந்து வீரர்கள் சங்கம் கோரிக்கை

    கோடைக்காலத்தில் போட்டிகளை இரவில் நடத்த வேண்டும் என்று ஸ்பெயின் கால்பந்து வீரர்கள் சங்கம் போட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
    ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து விளையாட்டு மிகப்பிரபலம். ஸ்பெயினில் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான முதன்மை தொடராக ‘லா லிகா’ இருந்து வருகிறது. இந்த தொடர் கடந்த வாரத்துடன் முடிந்தது. ஆனால், 2-ம் நிலை தொடரான செகுந்ரா டிவிஷனில் இன்னும் மூன்று வார போட்டிகள் உள்ளன. அதேபோல் நான்கு பிளே-ஆஃப் போட்டிகளும் உள்ளன.

    தற்போது ஸ்பெயினில் அதிகபட்ச வெயில் கொளுத்துகிறது. மாட்ரிட்டில் 33 டிகிரி செல்சியஸாகவும், செவிலேயில் 30 டிகிரி செல்சியஸ் அளவிலும் வெயில் பதிவாகியுள்ளது.

    செகுந்தரா டிவிஷன் போட்டிகள் மதியம் 3 மணியளவில் நடத்தப்பட்டு வருகிறது. அப்போது வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையான வெயிலால் தாக்கப்படுவார்கள். இதனால் போட்டியை இரவில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது ஸ்பெயின் கால்பந்து வீரர்கள் சங்கம்.
    Next Story
    ×