search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜூனியர் தேசிய டென்னிஸ்: புனே, குஜராத் சிறுவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
    X

    ஜூனியர் தேசிய டென்னிஸ்: புனே, குஜராத் சிறுவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஜூனியர் தேசிய டென்னிஸ் தொடரில் புனே மற்றும் குஜராத் மாணவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
    மகாராஷ்டிராவில் 11-வது ரமேஷ் தேசாய் நினைவு ஜூனியர் (16 வயதிற்குட்பட்டோர்) தேசிய டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    சிறுமிகளுக்கான அரையிறுதியில் முதல் நிலை வீராங்கனையான புனே மாநிலத்தின் சல்சா அஹர் 6-ம் நிலை வீராங்கனையான பிரெர்னா விசார்-ஐ 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். 2-ம் நிலை வீராங்கனை அசாமின் தனிஷா காஷ்யப் தெலுங்கானாவின் சன்ஷ்கிரிதி தமேராவை 6-2, 6-0 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    சிறுவர்களுக்கான அரையிறுதியில் 6-ம் நிலை வீரரான குஜராத்தின் செவின் பட்டேல் 6-4, 6-1 என ஆந்திராவின் அமான் கானை வீழ்த்தினார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த விம் சந்தீப்-ஐ இறுதிப் போட்டியில் சந்திக்கிறார். சந்தீப் அரையிறுதிப் போட்டியில் 3-ம் நிலை வீரரான குஜராத்தின் தேவ் ஜாவியாவை 4-6, 7-6(5), 6-4 என வீழ்த்தியிருந்தார்.
    Next Story
    ×