search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பம்: பிசிசிஐ செயலில் தவறில்லை என்கிறார் கோலி
    X

    பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பம்: பிசிசிஐ செயலில் தவறில்லை என்கிறார் கோலி

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டதில் எந்த தவறும் இல்லை என கோலி கூறியுள்ளார்.
    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் அனில் கும்ப்ளே. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு வருட ஒப்பந்தம் அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டார். இவரது தலைமையில் இந்திய டெஸ்ட் அணி 17 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்வியடைந்து ஐந்து நாடுகளுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியது.

    இவரது பதவிக்காலம் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் நேற்று பிசிசிஐ, தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கு அனில் கும்ப்ளே மட்டும் விதிவிலக்கு என்றும் தெரிவித்திருந்தது.

    இரண்டாவது ஆண்டாக கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிசிசிஐ-யின் இந்த நடவடிக்கையால் கும்ப்ளே மீண்டும் பயிற்சியாளராக செயல்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஒரு அணி பயிற்சியாளரின் தலைமையில் சிறப்பாக சென்று கொண்டிருக்கும்போது, அணியின் கேப்டன், பயிற்சியாளருக்கு நிர்வாகம் மிகவும் உறுதுணையாக இருப்பார்.

    அதேபோல் விராட் கோலி கும்ப்ளேவிற்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிசிசிஐ தனது வழக்கமாக செயலை செய்கிறது, அது சரியானதுதான், அதில் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று விராட் கோலி கூறியுள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி மேலும் கூறுகையில் ‘‘எனக்கு தெரிந்த வகையில் இந்த நடைமுறைதான் பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் இந்த பதவிக்கான இடம் நிரப்பப்படுவதற்கு இதே காரணம்தான் கடைபிடிக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கான பதவிக்காலம் முடியும்போது இதே முறைதான் கடைபிடிக்கப்படும்.

    ஆகவே, முந்தைய காலத்தில் நடைபெற்றதில் இருந்து தற்போது கும்ப்ளே விவகாரத்தில் எந்த விஷயமும் மாறுபட்டதாக நான் பார்க்கவில்லை. பிசிசிஐ ஒரு அங்கீகரிக்கப்பட்டது. அவர்கள் அதே மாதிரிதான் தொடர விரும்புவார்கள்.

    புதிய பயிற்சியாளரை நியமிப்பது குறித்து எனக்கு எந்த தகவலும் இல்லை. ஏனென்றால், பயிற்சியாளரை நியமிக்க அதற்கென கங்குலி, தெண்டுல்கர் மற்றும் லஷ்மண் தலைமையில் ஒரு குழு இருக்கிறது. அவர்கள் கடந்த ஆண்டு என்ன செய்தார்களோ, அதை பின்தொடர்வார்கள்’’ என்றார்.
    Next Story
    ×