search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எந்தவித குறைபாடும் இல்லாத அணி இங்கிலாந்து: விராட் கோலி சொல்கிறார்
    X

    எந்தவித குறைபாடும் இல்லாத அணி இங்கிலாந்து: விராட் கோலி சொல்கிறார்

    எந்தவித குறைபாடும் இல்லாத அணி இங்கிலாந்து என்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ள விராட் கோலி கூறியுள்ளார்.
    இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வருகிற 1-ந்தேதி முதல் ஜூன் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் முன்னணி 8 அணிகள் பங்கேற்கின்றன.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் வங்காள தேசம் ‘ஏ’ பிரிவிலும் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை ‘பி’ பிரிவிலும் இடம் பிடித்துள்ளன.

    ஒரு பிரிவில் இடம் பிடித்துள்ள அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை ஜூன் 4-ந்தேதி சந்திக்கிறது. தொடருக்கு முன் எல்லா அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் மோதுகின்றன. அதன்படி இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக 28-ந்தேதியும், வங்காள தேச அணிக்கெதிராக 30-ந்தேதியும் பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.

    இதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்து விட்டது. லண்டனில் பத்திரிகையாளர்களை சந்தித்த விராட் கோலி, இங்கிலாந்து அணியில் எந்தவொரு குறையும் இல்லை என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இங்கிலாந்து மிகமிக பேலன்ஸ் சைடு கொண்ட அணி. பந்து வீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் ஆகிய துறையில் சம பலனைக் கொண்டிருக்கும் உலகத்தின் சிறந்த இரண்டு அணிகளில் இங்கிலாந்தும் ஒன்று. 9 அல்லது 10-வது நபர் வரை பேட்டிங் செய்வார்கள். அனைத்து வீரர்களும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள். ஐந்து அல்லது ஆறு வீரர்கள் பேட்டிங் செய்வதுடன் பந்தும் வீசக்கூடியவர்கள். அதேபோல் ஜெட் வேகத்தில் பீல்டிங் செய்வதில் வல்லவர்கள்.



    இந்தியாவலில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி எப்படி விளையாடியது என்ற அனுபவம் நமக்கு இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்தை எதிர்கொள்வதில் ஒவ்வொரு அணிக்கும் கடும் சவாலாக இருக்கும். இங்கிலாந்து டெஸ்ட் அணி பலம் வாய்ந்தது என்றுதான் நமது மனதில் நிலைத்து நிற்கிறது.

    2015-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்குப்பின் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணி முற்றிலும் மாறியுள்ளது.

    தற்போதைய நிலையில் அவர்கள் 330 ரன்களுக்கு குறைவாக சேர்ப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்களை எதிர்த்து விளையாடும் அனைத்து அணிகளுக்கும் உண்மையிலேயே சவாலாக இருக்கும். இந்த தொடரில் அவர்கள் நீண்ட தூரம் வரை செல்வார்கள்.

    தற்போதைய சூழ்நிலையில் இங்கிலாந்து அணியிடம் ஏதாவது குறை இருக்கிறதா? என்று என்னிடம் கேட்டால், அப்படி எந்தவொரு குறையும் இல்லை. அவர்கள் மிகவும் வலிமையாக இருக்கிறார்கள்’’ என்றார்.
    Next Story
    ×