search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்: காலிறுதியில் சீனாவிடம் இந்தியா தோல்வி
    X

    சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்: காலிறுதியில் சீனாவிடம் இந்தியா தோல்வி

    சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் தொடரில் சீனாவிடம் இந்தியா தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.
    ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் என்ற இடத்தில் சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதியில் இந்தியா - சீனா அணிகள் மோதின. ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில் ஸ்ரீகாந்த் கிடாம்பி, சென் லாங்கை எதிர்கொண்டார். இதில் கிடாம்பி 16-21, 17-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

    ஆண்களுக்கான இரட்டையர் போட்டியில் ராங்கிரெட்டி - கிராக் ஷெட்டி ஜோடி ஃபு ஹெங்ஃபெங் - சாங் நான் ஜோடியை எதிர்கொண்டது. இதில் ராங்கிரெட்டி - கிராக் ஷெட்டி 9-21, 11-21 என சரணடைந்தது. கலப்பு இரட்டையர் போட்டியில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - அஸ்வினி பொண்ணப்பா ஜோடி லு காய் - ஹூயாங் யாகியோங் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய ஜோடி 21-16, 13-21, 16-21 என தோல்வியடைந்தது.

    இதன்மூலம் ஐந்து போட்டியில் மூன்றில் தோல்வியடைந்துள்ள நிலையில், காலிறுதியோடு இந்தியா வெளியேறுகிறது.

    பெண்களுக்கான ஒற்றையர் போட்டியில் பி.வி. சிந்துவும், பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா - ரெட்டி என். சிக்கி ஜோடியும் இன்னும் விளையாட வேண்டிய இருக்கிறது. இந்த இரு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றாலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை.
    Next Story
    ×