search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பென் ஸ்டோக்ஸ்-க்கு காயம் ஏற்படவில்லை: மோர்கன் சொல்கிறார்
    X

    பென் ஸ்டோக்ஸ்-க்கு காயம் ஏற்படவில்லை: மோர்கன் சொல்கிறார்

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 2 ஓவர்கள் மட்டுமே வீசிய பென் ஸ்டோக்ஸ்-க்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று மோர்கன் விளக்கம் அளித்துள்ளார்.
    இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. சொந்த மண்ணில் தொடர் நடைபெறுவதால் கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. அந்த அணியின் தலைசிறந்த வீரராக பென் ஸ்டோக்ஸ் உள்ளார். ஆல்ரவுண்டர் பணியில் இங்கிலாந்து அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார் என்பதில் எந்த ஐயமில்லை.

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான முன்னோட்டமாக இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்த தொடர் நேற்று தொடங்கியது. இந்த போட்டியின்போது இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் 2 ஓவர்கள் மட்டுமே வீசிய பின்னர், பசியோதெரபியிடம் ஆலோசித்த பின்னர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

    20-வது ஓவரை வீசிய பின்னர் வெளியேறிய அவர், 26-வது ஓவரின்போதுதான் களம் இறங்கினார். இருந்தாலும் அவர் பந்து வீசவில்லை. இதனால் பென் ஸ்டோக்ஸிற்கு காயம் ஏற்பட்டிருக்குமோ? என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால், அவருக்கு காயம் ஏற்படவில்லை என்று இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் கூறியுள்ளார்.



    இதுகுறித்து மோர்கன் கூறுகையில் ‘‘பென் ஸ்டோக்ஸ் மீண்டும் மைதானத்திற்கு திரும்பும்போது, பந்து வீச அனுமதி அளிக்கப்பட்டது. அவர் பந்து வீசினால் எந்தவித பாதிப்பும் இருக்கும் என்று என்று நான் எண்ணவில்லை. அவருக்கு முழங்காலில் வீக்கம் இல்லை.

    காயத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் காயத்தின் அறிகுறி இருக்கிறதா? என்பது குறித்து மதிப்பீடு செய்ய முடியும். காயம் ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்து தெரிவதற்காக அவர் வெளியேறியது சரியான முடிவு’’ என்றார்.
    Next Story
    ×