search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலியாவில் நான்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது இங்கிலாந்து
    X

    ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலியாவில் நான்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது இங்கிலாந்து

    ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி இந்த வருடம் இறுதியில் ஆஸ்திரேலியா செல்கிறது. அப்போது நான்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.
    கிரிக்கெட் டெஸ்டில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் மிகப்பெரியதாக கருதப்படுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரை கைப்பற்றுவதில் இரு அணிகளுக்கும் இடையே யுத்தமே நடைபெறும். தோல்விபெறும் அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தூக்கியெறிப்படும் சூழ்நிலையும் ஏற்படும்.

    ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் இந்த வருடம் நவம்பர் 23-ந்தேதி முதல் தொடங்கி அடுத்த வருடம் ஜனவரி மாதம் 8-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.

    இந்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவும், ஆஸ்திரேலிய சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் வகையிலும் இங்கிலாந்து அணி நான்கு பயிற்சி ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. இதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்து, பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும் மைதானங்களையும் அறிவித்துள்ளது.

    அதன்படி இங்கிலாந்து அணி நவம்பர் 4-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை இரண்டு நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் வெஸ்டன் ஆஸ்திரேலியா லெவன் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் பெர்த்தில் நடக்கிறது.

    2-வது பயிற்சி ஆட்டம் நான்கு நாட்கள் கொண்டதாகும். நவம்பர் 8-ந்தேதி அடிலெய்டில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கெதிராக பகல் இரவு ஆட்டமாக தொடங்கி நடக்கிறது. ஆஷஸ் தொடரின் 2-வது போட்டி அடிலெய்டில் டிசம்பர் 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை பகல் இரவு போட்டியாக நடக்கிறது. இதற்கு முன்னோட்டமாக இந்த பயிற்சி ஆட்டம் நடத்தப்படுகிறது.

    3-வது பயிற்சி ஆட்டத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கெதிராக 15-ந்தேதி மோதுகிறது. நான்கு நாட்கள் கொண்ட இந்த பயிற்சி ஆட்டம் நவம்பர் 15-ந்தேதி தொடங்குகிறது. நான்காவது பயிற்சி ஆட்டம் டிசம்பர் 9-ந்தேதி தொடங்குகிறது.
    Next Story
    ×