search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தரவரிசையில் சாதனைப் படைத்தது வங்காள தேசம்
    X

    நியூசிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தரவரிசையில் சாதனைப் படைத்தது வங்காள தேசம்

    நியூசிலாந்து அணியை முதன்முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் வீழ்த்தி தரவரிசையில் இலங்கை, பாகிஸ்தானை முந்தியுள்ளது வங்காள தேசம்.
    இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 18-ந்தேதி வரை 8 முன்னணி அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் வங்காள தேசம் அணியும் ஒன்று.

    இந்த தொடருக்கு முன்னோட்டமாக, வங்காள தேசம் அணி அயர்லாந்து சென்று மூன்று நாடுகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

    வங்காள தேசத்துடன் போட்டியை நடத்திய அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். நேற்று கடைசி லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் சேர்த்தது.



    பின்னர் விளையாடிய வங்காள தேசம் 48.2 ஓவரில் 5 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 271 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை முதன்முறையாக வீழ்த்தி வங்காள தேசம் அணி சாதனைப் படைத்துள்ளது. மேலும், ஐ.சி.சி.யின் தரவரிசையில் உலக சாம்பியனான இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளை பின்னுக்குத் தள்ளி முதன்முறையாக 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    முத்தரப்பு தொடரில் இரண்டு வெற்றி, ஒரு டிரா மூலம் 2-வது இடத்தை பிடித்ததன் மூலம் ஐ.சி.சி.யின் தர வரிசைக்கான புள்ளிகள் பட்டியலில் 93 புள்ளிகள் பெற்றுள்ளது. இலங்கை அணியும் 93 புள்ளிகள் பெற்றுள்ளது.



    இருந்தாலும் டெசிமல் பாயிண்ட் என அழைக்கப்படும் பாயிண்ட் வித்தியாசத்தில் 93.3 என வங்காள தேசம் இலங்கையை விட (92.8) அதிகம் இருப்பதால் 6-வது இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தான் 8-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 9-வது இடத்திலும் உள்ளது.

    இதன்மூலம் உலகக்கோப்பையை கைப்பற்றிய இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய மூன்று அணிகளை முதன்முறையாக வங்காளதேசம் பின்னுக்குத் தள்ளியுள்ளது. அத்துடன் 2019-ம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு நேரடி தகுதிப் பெறுவதற்கான வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியுள்ளது.
    Next Story
    ×