search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் அணியில் உமர் அக்மலுக்குப் பதிலாக ஹாரிஸ் சோஹைல் சேர்ப்பு
    X

    பாகிஸ்தான் அணியில் உமர் அக்மலுக்குப் பதிலாக ஹாரிஸ் சோஹைல் சேர்ப்பு

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணியில் உமர் அக்மலுக்குப் பதிலாக ஹாரிஸ் சோஹைல் சேர்க்கப்பட்டுள்ளார்.
    பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் உமர் அக்மல். பேட்டிங் மூலம் எப்படி பிரபலம் பெற்றாரோ?, அதேபோல் விமர்சனத்திலும் பெயர் பெற்றவர். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் அடிக்கடி எச்சரிக்கப்பட்டுள்ளார்.

    சமீபத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் அவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உடல் எடை அதிகமாக இருந்ததால் தேர்வு செய்யப்படவில்லை.

    ஜூன் 1-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணியில் உமர் அக்மல் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அந்த அணி இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று உடற்தகுதி இல்லாததால் பாகிஸ்தான் அணியில் இருந்து உமர் அக்மல் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஆல் ரவுண்டர் ஹாரிஸ் சோஹைல் சேர்க்கப்பட்டுள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒவ்வொரு அணியும் வரும் 25-ந்தேதி வரை தங்களது வீரர்களை மாற்றிக் கொள்ள முடியும்.
    Next Story
    ×