search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். மூலம் என்னுடைய ஆட்டம் மேன்மையடைந்துள்ளது: ஸ்டோக்ஸ்
    X

    ஐ.பி.எல். மூலம் என்னுடைய ஆட்டம் மேன்மையடைந்துள்ளது: ஸ்டோக்ஸ்

    ஐ.பி.எல். தொடரில் தலைசிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடியதன் மூலம், தன்னுடைய ஆட்டம் மேன்மையடைந்துள்ளதாக பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
    இங்கிலாந்து அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக இருந்தவர் பிளின்டாஃப். அவர் ஓய்வு பெற்றதும் பென் ஸ்டோக்ஸ் அந்த இடத்தை பிடித்துக் கொண்டார். உலகளவிலும் சிறந்த ஆல்ரவுண்டராக திகழந்து வருகிறார். தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    முதன்முறையாக பென் ஸ்டோக்ஸ், இந்த வருடத்திற்கான ஐ.பி.எல். தொடரில் கலந்து கொண்டார். லீக் தொடர் முழுவதும் விளையாடிய அவர், பின்னர் நாக்அவுட் சுற்றில் பங்கேற்காமல் இங்கிலாந்து சென்று விட்டார். 12 போட்டிகளில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 12 விக்கெட்டுக்கள் வீ்ழ்த்தியதுடன், ஒரு சதத்துடன் 316 ரன்கள் குவித்தார்.

    ஐ.பி.எல். தொடர் இறுதிப் போட்டி முடிந்த பின்னர், பென் ஸ்டோக்ஸ் இந்த ஐ.பி.எல். சீசனின் ‘மிகவும் மதிப்புமிக்க வீரர்’ விருதை பெற்றார்.

    ஐ.பி.எல். தொடரில் அவர் விளையாடியது குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘உலகின் தலைசிறந்த வீரர்கள் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் பயிற்சியாளர்கள் உடன் இணைந்து பணியாற்றியதன் மூல்ம என்னுடைய ஆட்டம் மேன்மையடைந்துள்ளதாக உணர்கிறேன்.



    புனே அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் எரிக் சிமோன்ஸ் மூலம் என்னுடைய பந்து வீச்சு திறமை அடுத்த நிலைக்கு சென்றுள்ளது. 6 வாரங்கள் அவருடன் இணைந்து எடுத்த பயிற்சி மிகவும் சிறப்பாக அமைந்தது.

    ஸ்மித் வலைப்பயிற்சியின்போது சில டிப்ஸ்களை வழங்கினார். அவருடன் நான் பேட்டிங் செய்ததை நினைவு கூர்ந்து பார்ப்பேன். அதன்மூலம் ஆஸஷ் தொடரில் அவருக்கு எதிராக விளையாடும்போது அது எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×