search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டில் பும்ரா ஆதிக்கம் செலுத்துவார்: மும்பை பந்துவீச்சு பயிற்சியாளர்
    X

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டில் பும்ரா ஆதிக்கம் செலுத்துவார்: மும்பை பந்துவீச்சு பயிற்சியாளர்

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பும்ரா ஆதிக்கம் செலுத்துவார் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷானே பான்ட் கூறியுள்ளார்.
    மும்பை:

    ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி 3-வது முறையாக கைப்பற்ற வேகப்பந்து வீரர் பும்ரா முக்கிய பங்கு வகித்தார். அவர் 20 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ‘டெத் ஓவர்’ என்று அழைக்கப்படும் கடைசி கட்ட ஓவர்களில் மிகவும் நேர்த்தியாக வீசக்கூடிய பவுலராக பும்ரா ஜொலிக்கிறார். புனே அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 17-வது ஓவரில் அவர் 3 ரன்னே கொடுத்து டோனியின் விக்கெட்டை கைப்பற்றினார். இந்த ஓவர் தான் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பும்ரா ஆதிக்கம் செலுத்துவார் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பான்ட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-



    பும்ரா மிகவும் திறமை வாய்ந்த பவுலர். இதனால் தான் அவர் வெற்றிகரமான பந்துவீச்சாளராக ஜொலிக்கிறார். அவர் முதல் முறையாக இங்கிலாந்தில் ஒருநாள் போட்டியில் (சாம்பியன்ஸ் டிராபி) ஆட இருக்கிறார்.

    20 ஓவர் போட்டியில் இருந்து ஒருநாள் ஆட்டத்துக்கு மாறுவது சற்று கடினமானதே. ஆனாலும் பும்ரா சிறப்பாக பந்துவீசுவார் இந்தியாவின் வெற்றிக்கு அவர் முக்கிய பங்காற்றுவார்.

    அவர் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய பந்து வீச்சாளர் கிரிக்கெட்டின் அனைத்து நிலைகளிலும் அபாரமாக வீசக்கூடிய உலகின் சிறந்த பவுலர் ஆவார்.

    இவ்வாறு ஷானே பான்ட் கூறியுள்ளார்.

    இதேபோல மும்பை அணியின் கேப்டனும், இந்திய அணியின் தொடக்க வீரருமான ரோகித்சர்மாவும் பும்ராவின் பந்துவீச்சை பாராட்டியுள்ளார்.



    மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை நடக்கிறது.

    நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அந்த பிரிவில் உள்ளன.

    இந்திய அணி 4-ந்தேதி பாகிஸ்தானையும், 8-ந்தேதி இலங்கையையும், 11-ந்தேதி தென்னாப்பிரிக்காவையும் சந்திக்கின்றன.
    Next Story
    ×