search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிற்சி ஆட்டத்தில் டி காக் சதம்: சசக்ஸ் அணியை வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா
    X

    பயிற்சி ஆட்டத்தில் டி காக் சதம்: சசக்ஸ் அணியை வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா

    சசக்ஸ் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் டி காக் சதம் அடித்ததால் அந்த அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
    இங்கிலாந்தில் வருகிற 1-ந்தேதி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்த சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில், தொடருக்கு முன்னோட்டமாக தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்துடன் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    அதற்கு முன் தென்ஆப்பிரிக்கா அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. அதன்படி நேற்று சசக்ஸ் அணிக்கெதிராக முதல் பயிற்சி ஆட்டத்தில் மோதியது. மழைக் காரணமாக ஆட்டம் 32 ஓவராக குறைக்கப்பட்டது.

    தென்ஆப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பரும், தொடக்க பேட்ஸ்மேனும் ஆன டி காக் அதிரடியாக விளையாடி 78 பந்தில் 104 ரன்கள் சேர்க்க, தென்ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் குவித்தது. டி காக்கிற்கு உதவியாக பர்னெல் 42 பந்தில் 61 ரன்னும், டுமினி 46 பந்தில் 68 ரன்னும் சேர்த்தனர்.

    பின்னர் விளையாடிய சசக்ஸ் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதல் பயிற்சி ஆட்டத்திலேயே வெற்றி பெற்றது தென்ஆப்பிரிக்க அணிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    2-வது பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அணி நார்தம்ப்டன் அணியை எதிர்கொள்கிறது. அதன்பின் புதன்கிழமை இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.
    Next Story
    ×