search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிகளுக்கு கவாஜா, ட்ராவிஸ் ஹெட் கேப்டனாக நியமனம்
    X

    ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிகளுக்கு கவாஜா, ட்ராவிஸ் ஹெட் கேப்டனாக நியமனம்

    தென்ஆப்பிரிக்கா சென்று விளையாட இருக்கும் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியின் கேப்டனாக கவாஜா மற்றும் ட்ராவிஸ் ஹெட் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியிலும், முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் விளையாட இருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட நான்கு நாள் கொண்ட டெஸ்ட் போட்டி ஜூலை 12-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது.

    இதற்கான ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய சீனியர் அணியில் விளையாடும் கவாஜா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:-

    1. உஸ்மான் கவாஜா (கேப்டன்), 2. க்ளென் மேக்ஸ்வெல் (துணை கேப்டன்), 3. அஷ்டோன் அகர், 4. கேமரூன் பான்கிராப்ட், 5. ஜேசன் பெரென்டோர்ஃப், 6. ஜேக்சன் பேர்ட், 7. அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்). 8. ஹில்டன் கார்ட்ரைட், 9. ட்ராவிஸ் ஹெட், 10. கர்டிஸ் பேட்டர்சன், 11. சாட் சேயர்ஸ், 12. மிட்ச் ஸ்வெப்சன், 13. கிறிஸ் ட்ரெமயின், 14. ஜேக் வைல்டர்மத்.

    நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர், தென்ஆப்பிரிக்கா ‘ஏ’, ஆஸ்திரேலியா ‘ஏ’ மற்றும் இந்தியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 26-ந்தேதியில் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கு ட்ராவிஸ் ஹெட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    முத்தரப்பு தொடருக்கான ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ட்ராவிஸ் ஹெட் (கேப்டன்), 2. அஷ்டோன் அகர், 3. ஜேசன் பெரென்டோர்ஃப், 4. ஸ்காட் போலந்து, 5. அலெக்ஸ் கேரி, 6. ஹில்டன் கார்ட்ரைட், 7. சாம் ஹீஸ்லெட், 8. டேனியல் ஹியூக்ஸ், 9. கேன் ரிச்சர்ட்சன், 10. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 11. மிட்ச் ஸ்வெப்சன், 12. கிறிஸ் ட்ரெமெயின், 13. ஜேக் வில்டர்மத்.
    Next Story
    ×