search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவை வீழ்த்துவதற்காக இங்கிலாந்து செல்லவில்லை: இன்சமாம்
    X

    இந்தியாவை வீழ்த்துவதற்காக இங்கிலாந்து செல்லவில்லை: இன்சமாம்

    ‘இந்தியாவை வீழ்த்துவதற்காக நாங்கள் இங்கிலாந்து செல்லவில்லை; சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதற்காக’ என்று இன்சாமாம் உல் ஹக் கூறியுள்ளார்.
    ஐ.சி.சி.யின் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது. இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் இந்த தொடர் குறித்து பேச்சு தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற விவாதம் மேலோங்கியுள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவின் தலைவரான இன்சமாம் உல் ஹக், நாங்கள் இந்தியாவை வீழ்த்துவதற்காக இங்கிலாந்து செல்லவில்லை. கோப்பையை வெல்வதற்காக செல்கிறோம் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘நாங்கள் இந்தியாவை வீழ்த்துவதற்காக மட்டுமே இங்கிலாந்து செல்லவில்லை. ஆனால் எங்களுடைய முதன்மையான இலக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான்.



    எனது தலைமையிலான பாகிஸ்தான் அணி 2004-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எட்ஜ்பாஸ்டனில் இந்தியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதே மைதானத்தில் தற்போது போட்டி நடைபெற இருக்கிறது. மீண்டும் எங்களால் இந்தியாவை வீழ்த்த முடியும்’’ என்றார்.

    வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடும் வீரர்கள் அங்கிருந்து நேரடியாக இங்கிலாந்து செல்ல இருக்கிறார்கள். மீதமுள்ள வீரர்கள் பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்து செல்வார்கள்.
    Next Story
    ×