search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்துடன் இன்று மோதல்: பஞ்சாப் 6-வது வெற்றி பெறுமா?
    X

    குஜராத்துடன் இன்று மோதல்: பஞ்சாப் 6-வது வெற்றி பெறுமா?

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் குஜராத்துடன் மோதும் பஞ்சாப் அணி 6-வது வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெங்களூ:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு பெங்களூரில் நடக்கும் ஆட்டத்தில் கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- வீராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    கொல்கத்தா 11 ஆட்டத்தில் 7 வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிட முடியும். அந்த அணியில் உத்தப்பா, சுனில்நரீன், மனிஷ் பாண்டே, யூசுப் பதான், கிறிஸ்வோக்ஸ், உமேஷ் யாதவ் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    பெங்களூர் 12 ஆட்டத்தில் 2 வெற்றி மட்டுமே பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. வீராட்கோலி, கிறிஸ்கெய்ல், டிவில்லியர்ஸ் போன்ற அதிரடி வீரர்கள் இருந்தும் ஆட்டம் எடுபடவில்லை. இன்று ஆறுதல் வெற்றிக்காக அந்த அணி போராடும்.


    இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்- சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் 10 ஆட்டத்தில் 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

    அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க எஞ்சிய 4 ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் பஞ்சாப்புக்கு உள்ளது. கடந்த 2 ஆட்டத்தில் (டெல்லி, பெங்களூர்) வெற்றி பெற்று உள்ளதால் நம்பிக்கையுடன் இருக்கிறது.

    பஞ்சாப் 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் ஹசிம் அம்லா, மார்டின் குப்தில், ஷான்மார்ஷ், சந்தீப் சர்மா, மொகித்சர்மா, மார்ன் வோரா போன்ற வீரர்கள் உள்ளனர்.

    குஜராத் 11 ஆட்டத்தில் 3 வெற்றி மட்டுமே பெற்று ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. ஆறுதல் வெற்றி பெற அந்த அணி முயற்சிக்கும்.

    Next Story
    ×