search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: நியூசிலாந்தை 3-0 என வீழ்த்தியது இந்தியா
    X

    அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: நியூசிலாந்தை 3-0 என வீழ்த்தியது இந்தியா

    மலேசியாவில் நடைபெற்று வரும் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்தை 3-0 என வீழ்த்தி அசத்தியது.
    அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியை இந்தியா 2-2 என டிரா செய்தது.

    இந்நிலையில் இன்று இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா 3-0 என நியூசிலாந்தை வீழ்த்தியது. முதல் பாதி நேரத்தில் ஹர்மன்ப்ரீத் சிங், மந்தீப் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 2-வது பாதி நேரத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் மேலும் ஒரு கோல் அடிக்க இந்தியா 3-0 என முன்னிலைப் பெற்றது.



    நியூசிலாந்து வீரர்களால் எதிர்கோல் அடிக்க முடியாததால் இந்தியா 3-0 என வெற்றி பெற்றது. இந்தியா மே 2-ந்தேதி ஆஸ்திரேலியாவையும், 3-ந்தேதி ஜப்பானையும், 5-ந்தேதி மலேசியாவையும் எதிர்கொள்கிறது.
    Next Story
    ×