search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய ஸ்குவாஷ் போட்டி: இறுதிப்போட்டியில் தீபிகா-ஜோஸ்னா
    X

    ஆசிய ஸ்குவாஷ் போட்டி: இறுதிப்போட்டியில் தீபிகா-ஜோஸ்னா

    19-வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஒற்றையரில் நேற்று நடந்த அரைஇறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல், ஹாங்காங் வீரர் அனி அவ்-ஐ வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
    சென்னை:

    19-வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையரில் நேற்று நடந்த அரைஇறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல் 11-9, 7-11, 11-7, 11-9 என்ற செட் கணக்கில் அனி அவ்-ஐ (ஹாங்காங்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 49 நிமிடங்கள் நீடித்தது. மற்றொரு அரைஇறுதியில் இந்திய நட்சத்திரம் ஜோஸ்னா சின்னப்பா 11-6, 11-4, 11-8 என்ற நேர் செட்டில் டோங் டஸ் விங்கை (ஹாங்காங்) எளிதில் வீழ்த்தினார். இன்று நடைபெறும் மகுடத்திற்கான இறுதி ஆட்டத்தில் சென்னையைச் சேர்ந்த தீபிகா பலிக்கல்-ஜோஸ்னா சின்னப்பா மோத இருக்கிறார்கள்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரை இறுதியில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் 11-6, 11-7, 11-3 என்ற நேர் செட்டில் லியோ அவ்-ஐ (ஹாங்காங்) பதம் பார்த்து முதல்முறையாக இறுதி சுற்றை எட்டினார். சவுரவ் கோஷல் இறுதி ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் முதலிடம் வகிக்கும் மேக்ஸ் லீயை (ஹாங்காங்) எதிர்கொள்கிறார்.

    ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் போட்டி 1981-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியர்கள் யாரும் இதுவரை பட்டம் வென்றதில்லை. 1996-ம் ஆண்டு இந்திய வீராங்கனை மிஷா கிரேவால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதே இந்தியாவின் சாதனையாக இருந்தது. இந்த முறை மூன்று இந்தியர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்து இருக்கிறார்கள். 
    Next Story
    ×