search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    50 ஓவர் போட்டி தேர்வுக்கு ஐ.பி.எல்.-ஐ விட உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடுவதே முக்கியம்: முன்னாள் தேர்வாளர்
    X

    50 ஓவர் போட்டி தேர்வுக்கு ஐ.பி.எல்.-ஐ விட உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடுவதே முக்கியம்: முன்னாள் தேர்வாளர்

    இந்தியாவின் 50 ஓவர் போட்டிக்கு தேர்வாக வேண்டுமென்றால் ஐ.பி.எல். தொடரை காட்டிலும் உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடுவதே முக்கியமானது என்று முன்னாள் தேர்வாளர் கூறியுள்ளார்.
    ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இளம் வீரர்களான நிதிஷ் ராணா, சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி தொடங்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் 50 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இவர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால் இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் கிரண் மோரே ஐ.பி.எல். தொடரைக் காட்டிலும் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடுவதை வைத்து தேர்வு செய்வதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து கிரண் மோரே கூறுகையில் ‘‘இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி மாறுபட்ட பந்தால் விளையாடும் போட்டி. அதற்கு அனுபவம் வாய்ந்த வீரர்கள்தான் தேவை’’ என்றார்.

    மற்றொரு முன்னாள் தேர்வாளர் சபா கரிம் கூறும்போது, ‘‘டி20 கிரிக்கெட் அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும்போது ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். நான் டி20 அணிக்கு மட்டும் அணியை தேர்வு செய்தால் ராணா பற்றி யோசிக்க முடியும். ஆனால் 50 ஓவர் போட்டிக்கு உறுதியாக ராணாவை நினைத்து பார்க்க முடியாது. விஜய் ஹசாரே தொடரில் அவர் எப்படி விளையாடினார் என்றுதான் பார்ப்பேன். டோனிக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே ரிஷப் பந்த்-ஐ தேர்வு செய்யலாம். அதேபோல் ஜடேஜா அணியில் இடம்பெறாவிடில், அவருக்குப் பதிலாக குருணால் பாண்டியாவை பரிசீலனை செய்யலாம்’’ செய்யலாம் என்றார்.
    Next Story
    ×