search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 158 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது புனே
    X

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 158 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது புனே

    புனேயில் நடைபெற்று வரும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 158 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்.
    ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி புனேயில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்கெதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங், அனிகெட் ஆகியோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக ஆடம் மில்னே, சச்சின் பேபி மற்றும் ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். புனே அணியில் ஷர்துல் தாகூர், டு பிளிசிஸ் நீக்கப்பட்டு தீபக் சாஹர், பெர்குசன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    புனே அணி:- 1. ரகானே. 2. திரிபாதி, 3. ஸ்மித், 4. டோனி, 5. திவாரி, 6. கிறிஸ்டியன், 7. வாஷிங்டன் சுந்தர், 8. பெர்குசன், 9. உனத்கட், 10. சாஹர், 11. இம்ரான் தாஹிர்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:- 1. விராட் கோலி, 2. டிராவிஸ் ஹெட், 3. டி வில்லியர்ஸ், 4. கேதர் ஜாதவ், 5. சச்சின் பேபி, 6. ஸ்டூவர்ட் பின்னி, 7. பவன் நெஹி, 8. மில்னே, 9. பத்ரி, 10. சாஹல், 11. அரவிந்த்.

    புனே அணியின் தொடக்க வீரர்களாக ரகானே, திரிபாதி ஆகியோர் களம் இறங்கினார்கள். ரகானே 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து திரிபாதி உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. திரபாதி 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஸ்மித் 45 ரன்னில் வெளியேறினார்.



    அடுத்து வந்த திவாரி, டோனி ஆகியோர் அவுட்டாகாமல் முறையே 44, 21 ரன்கள் எடுக்க ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 சேர்த்தது.

    158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×