search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆட்டநாயகன் விருதை சகோதரருக்கு அர்ப்பணித்த ரஷித் கான்
    X

    ஆட்டநாயகன் விருதை சகோதரருக்கு அர்ப்பணித்த ரஷித் கான்

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருது பெற்ற ரஷித் கான், அந்த விருதினை தனது சகோதரருக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
    மொகாலியில் நேற்று நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 207 ரன்கள் குவித்தது. பின்னர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 208 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.

    ரஷித் கான், புவனேஸ்வர் குமார் ஆகியோரின் அபார பந்து வீச்சால் பஞ்சாப் அணியில் 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. குறிப்பாக ரஷித் கான் நான்கு ஓவரில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து முக்கியமான நேரத்தில் மோர்கன் விக்கெட்டை வீழ்த்தினார்.

    இதனால் ரஷித் கான் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். ஆட்டநாயகன் விருதுக்கு எனது குடும்பம் மற்றும் நாடு என ஏராளமான பொருள் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘இந்த ஆட்ட நாயகன் விருதை எனது சகோதரருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். அவர் எனக்காக பிரார்த்தனை செய்தவர். அவருக்கு இந்த விருது சென்றடையும். ஆட்ட நாயகன் விருது பெற்றது எனக்கும், என் குடும்பத்திற்கும் என் நாட்டிற்கும் மிகவும் முக்கியமானது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி கொண்டிருக்கும் அனுபவம் என்னுடைய வாழ்க்கையை மாற்றியுள்ளது. ஆசிய நாட்டில் உள்ள பெரும்பாலான ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆகவே, முத்தையா முரளீதரன் போன்ற ஜாம்பவான்கள் துணையுடன் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக பந்து வீச முடிகிறது.

    பயிற்சியின்போது முத்தையா முரளீதரன் உடன் இணைந்து கடினமாக உழைக்கிறேன். நான் சிறந்த முறையில் பந்து வீசுவதற்கு ஏற்க வகையில் நம்பிக்கை ஏற்படுத்துவதும், உத்வேகத்தையும் அளிக்கிறார்.

    ஐ.பி.எல். போன்ற புகழ்வாய்ந்த தொடரில் என்னைப்போன்று இளம் வயதில் விளையாடுவது அதிர்ஷ்டமாக உணர்கிறேன். ஆப்கானிஸ்தானின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கு நான் திரும்பும்போது இந்த அனுபவம் எனக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும்.



    எந்வொரு போட்டியில் ஒரு பேட்ஸ்மேனுக்காக முன்கூட்டியே என்னுடைய மனநிலையை தயார்படுத்தியது கிடையாது. பேட்ஸ்மேனை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் என்னுடைய சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த முயற்சி செய்வேன். ஆனால், நான் எடுத்துள்ள விக்கெட்டுக்களில் எது சிறந்தது என்று கேட்டால், குஜராத் அணிக்கெதிராக மெக்கல்லம் விக்கெட்டுதான் சிறந்தது என்பேன்.



    ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானே எனக்கும், மொகமது நபிக்கும் ஆதரவாக உள்ளது. நாங்கள் சன்ரைசர்ஸ் அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று பிரேயர் செய்கிறார்கள். அத்துடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் போட்டியை டி.வி., வெப்சைட் மற்றும் சமூக இணைய தளம் மூலம் ரசிக்கிறார்கள். எங்களை பின்தொடர்ந்து பார்ப்பது மிகச் சிறந்ததாக உணர்கிறேன். எங்களுடைய நாட்டுமக்கள் அனைவரும் ஆதரவாக உள்ளனர். ஐ.பி.எல். பெரிய வீடாக கருதப்படுகிறது. அதில் நாங்கள் இடம்பிடித்துள்ளோம் என்பதை பார்க்க பெருமையாக இருக்கிறது’’ என்றார்.
    Next Story
    ×