search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல்.: புனே அணிக்கெதிராக டாஸ் வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பீல்டிங் தேர்வு- கெய்ல் அவுட்
    X

    ஐ.பி.எல்.: புனே அணிக்கெதிராக டாஸ் வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பீல்டிங் தேர்வு- கெய்ல் அவுட்

    ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் முதல் போட்டியில் புனே அணிக்கெதிராக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது.
    ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி புனேயில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் விராட் கோலி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங், அனிகெட் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ஆடம் மில்னே, சச்சின் பேபி மற்றும் ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    புனே அணியில் ஷர்துல் தாகூர், டு பிளிசிஸ் நீக்கப்பட்டு தீபக் சாஹர், பெர்குசன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    புனே அணி:- 1. ரகானே. 2. திரிபாதி, 3. ஸ்மித், 4. டோனி, 5. திவாரி, 6. கிறிஸ்டியன், 7. வாஷிங்டன் சுந்தர், 8. பெர்குசன், 9. உனத்கட், 10. சாஹர், 11. இம்ரான் தாஹிர்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:- 1. விராட் கோலி, 2. டிராவிஸ் ஹெட், 3. டி வில்லியர்ஸ், 4. கேதர் ஜாதவ், 5. சச்சின் பேபி, 6. ஸ்டூவர்ட் பின்னி, 7. பவன் நெஹி, 8. மில்னே, 9. பத்ரி, 10. சாஹல், 11. அரவிந்த்.
    Next Story
    ×