search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் 6-ல் 5-ஐ வென்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்: 34 பந்தில் 74 ரன்கள் குவித்த பிஞ்ச் நம்பிக்கை
    X

    குஜராத் 6-ல் 5-ஐ வென்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்: 34 பந்தில் 74 ரன்கள் குவித்த பிஞ்ச் நம்பிக்கை

    குஜராத் லயன்ஸ் அணி அடுத்து விளையாடும் 6 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நம்பிக்கை உள்ளதாக, பெங்களூரு அணிக்கெதிராக 74 ரன்கள் குவித்த பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் பிளேஆஃப் சுற்று குறித்து நினைத்து பார்க்க முடியும் என்பதால் இரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? போட்டியாக இருந்தது.

    ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியில் பெங்களூரு அணி சாதிக்க தவறியது. குஜராத் லயன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் லயன்ஸ் அணி ஆரோன் பிஞ்ச்-ன் அதிரடியால் 13.5 ஓவரிலேயே குஜராத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஆரோன் பிஞ்ச் 34 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 72 ரன்கள் குவித்தார். ‘இந்த வெற்றி எங்களுக்கு முக்கியமானது. அத்துடன் ரன்ரேட் அதிகம் வேண்டியுள்ளது. வரவிருக்கின்ற 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’ என பிஞ்ச் கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஆரோன் பிஞ்ச் மேலும் கூறுகையில் ‘‘பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு அதிக அளவில் உள்ளது. கடந்த வருடம் நாங்கள் முதல் 7 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்றோம். தற்போது 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற வேண்டும் என்ற அதே நிலையில் உள்ளது. இது ஒரு சிறப்பான சவால் என்று நினைக்கிறேன்” என்றார்.

    Next Story
    ×