search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூர் அணி தோல்வி: கூட்டு முயற்சியால் வென்றோம் - கேப்டன் ரெய்னா
    X

    பெங்களூர் அணி தோல்வி: கூட்டு முயற்சியால் வென்றோம் - கேப்டன் ரெய்னா

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வீரர்களின் கூட்டு முயற்சியால் வெற்றி பெற்றோம் என கேப்டன் சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.
    பெங்களூர்:

    ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தி குஜராத் பதிலடி கொடுத்தது.

    பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவரில் 134 ரன்னில் சுருண்டது. பவான் நெகி அதிக பட்சமாக 19 பந்தில் 32 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) கேதர் ஜாதவ் 18 பந்தில் 31 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஆண்ட்ரூ டை 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய குஜராத் லயன்ஸ் 13.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆரோன் பிஞ்ச் 34 பந்தில் 72 ரன்னும் (5 பவுண்டரி, 6 சிக்சர்) கேப்டன் ரெய்னா 30 பந்தில் 34 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். சாமுவேல் பத்ரி 2 விக்கெட் கைப்பற்றினார்.



    இந்த வெற்றி மூலம் பெங்களூர் அணியிடம் ஏற்கனவே தோற்றதற்கு குஜராத் பதிலடி கொடுத்தது. அந்த அணி 3-வது வெற்றியை பெற்று 6-வது இடத்திற்கு முன்னேறியது.

    இந்த வெற்றி குறித்து குஜராத் லயன்ஸ் கேப்டன் ரெய்னா கூறியதாவது:-



    நாங்கள் அனைத்து துறைகளிலும் (பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்) சிறப்பாக செயல்பட்டோம். ஆண்ட்ரூ டை, பால்க்னெர், ஜடேஜாவின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. ஆண்ட்ரூ டை அடுத்தடுத்து விக்கெட்டை வீழ்த்தியது திருப்பு முனையாகும். ஆரோன் பிஞ்ச் பேட்டிங் அற்புதமாக இருந்தது.

    வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றியை பெற்றோம். இந்த வெற்றி எங்களுக்கு அதிக நம்பிக்கையை கொடுத்துள்ளது.

    பெங்களூர் அணி சந்தித்த 6-வது தோல்வியாகும். இதன் மூலம் அந்த அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 5 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி இனிவரும் 5 ஆட்டங்களில் வெற்றியில் பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது.

    இந்த தோல்வி குறித்து பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறும் போது, “ஒவ்வொரு வீரரும் சரியாக ஆடவில்லை. நாங்கள் கடுமையான நெருக்கடியில் உள்ளோம். ஒவ்வொரு வீரரும் பொறுப்பாவார்கள். குஜராத் அணி வீரர்கள் எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட்டார்கள்” என்றார்.
    Next Story
    ×