search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்; அஜய் ஜெயராம் அவுட்
    X

    ஆசிய சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்; அஜய் ஜெயராம் அவுட்

    ஆசிய சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடரில் பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அஜய் ஜெயராம் 2-வது சுற்றில் தோல்வியடைந்து காலிறுதி வாய்ப்பை இழந்தார்.
    ஆசிய சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் சீனாவில் உள்ள வுஹானில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி. சிந்து, ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை எதிர்கொண்டார்.

    இதில் பி.வி. சிந்து 21-14, 21-15 என நேர்செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனையை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற சிந்துவிற்கு 40 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அஜய் ஜெயராம் சீன தைபே வீரரரை எதிர்கொண்டார். இதில் 19-21, 10-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
    Next Story
    ×