search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய பேட்மிட்டன் சாம்பியன்ஷிப்: ஜப்பான் வீராங்கனையிடம் வீழ்ந்த சாய்னா நேஹ்வால்
    X

    ஆசிய பேட்மிட்டன் சாம்பியன்ஷிப்: ஜப்பான் வீராங்கனையிடம் வீழ்ந்த சாய்னா நேஹ்வால்

    சீனாவில் நடந்து வரும் ஆசிய பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.
    பெய்ஜிங்:

    சீனாவின் வாஹான் நகரில் ஆசிய பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் கோப்பை தொடர் கடந்த 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இத்தொடரில் ஆசிய கண்டத்திலுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி பேட்மிட்டன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற பெண்கள் பிரிவு முதல்சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால், ஜப்பானின் சயாகா சாடோ-வை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி இப்போட்டியின் முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றிய சாய்னா, அடுத்த இரு செட்களிலும் வெற்றி வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார்.

    இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களை 26-21, 18-21 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய ஜப்பான் வீராங்கனை சயாகா சாடோ, சாய்னாவிடமிருந்து வெற்றிக் கனியை தட்டிப் பறித்தார். இந்த தொடரில் பட்டம் வெல்வார் என்று கணிக்கப்பட்ட சாய்னா முதல் சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்திருப்பது இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
    Next Story
    ×