search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்மண்டல அளவிலான கைப்பந்து போட்டி: முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்
    X

    தென்மண்டல அளவிலான கைப்பந்து போட்டி: முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்

    புதுவையில் தென்மண்டல அளவிலான கைப்பந்து போட்டி உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி :

    புதுவையில் தென்மண்டல அளவிலான கைப்பந்து போட்டி உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது.

    விழாவில் கலந்து கொண்டு கைப்பந்து போட்டிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். பின்னர் அவருக்கு வீரர் -வீராங்கனைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

    நிகழ்ச்சியில் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் அமைச்சரும், புதுவை பிரதேச கைப்பந்து சங்க தலைவருமான தேனீ.ஜெயக்குமார், தமிழ்நாடு கைப்பந்து சங்க துணைத்தலைவர் டாக்டர் பொன்.சிகாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    தென்மண்டல அளவிலான கைப்பந்து போட்டியை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவருக்கு வீராங்கனைகளை அறிமுகம் செய்து வைத்தபோது எடுத்த படம்.

    இந்த போட்டிகளில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுவை மாநிலத்தை சேர்ந்த சீனியர் ஆண்கள், பெண்கள் பிரிவை சேர்ந்த 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டிகள் வருகிற 29-ந் தேதி வரை நடைபெற உள்ளன.

    ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் புதுவை அணியும், ஆந்திரா அணியும் மோதின. இதில் புதுவை அணி 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு அணியும், தெலுங்கானா அணியும் மோதியது. இதில் தமிழ்நாடு அணி 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

    பெண்கள் பிரிவில் கர்நாடகா அணியும், புதுவை அணியும் மோதின. இதில் கர்நாடகா அணி 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கானா அணி, ஆந்திர அணியை எதிர்கொண்டது. இதில் தெலுங்கானா அணி 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
    Next Story
    ×