search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயம் குணமடையாததால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பிராவோ விலகல்: குஜராத் அணிக்கு பின்னடைவு
    X

    காயம் குணமடையாததால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பிராவோ விலகல்: குஜராத் அணிக்கு பின்னடைவு

    காயம் முழுமையாக குணமடையாததால் ஐ.பி.எல். தொடரில் இருந்து வெயின் பிராவோ விலகியுள்ளார். அவர் இடம்பெறாதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
    டி20 கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆல் ரவுண்டர் வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த வெயின் பிராவோ. இவர் வெஸ்ட் இண்டீசைத் தொடர்ந்து அனைத்து தொழில்முறை கிரிக்கெட்டான டி20 லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக் பாஷ் டி20 லீக் தொடரின்போது தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

    இதனால் அவர் கடந்த சில மாதங்களாக விளையாடவில்லை. ஐ.பி.எல். சீசன் 10 தொடக்கத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. காயம் ஓரளவிற்கு குணமடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இதனால் குஜராத் லயன்ஸ் அணியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற வரும் குஜராத் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. இதுகுறித்து போட்டியின்போது ரெய்னா கூறுகையில் ‘‘இந்த தொடரில் இருந்து வெயின் பிராவோ விலகியுள்ளார். அவரது காயம் குணமடைய இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் ஆகும். நாங்கள் அணி நிர்வாகத்திடம் பேசி, மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டியது அவசியம்’’ என்றார்

    இதனால் வெயின் பிராவோ இந்த ஐ.பி.எல். தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார். இது குஜராத் அணிக்கு பெரிய பின்னடைவாகும். பிராவோ 106 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 122 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    Next Story
    ×